வி.சுகிர்தகுமார் 0777113659
அரசாங்கம் வீடற்றவர்களுக்கான வீடுகளை பெற்றுக்கொடுக்கும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும்;; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான 55 வீடுகளும் 6 இலட்சம் பெறுமதியான 24 வீடுகளும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் மகாசக்தி கிராமத்தில் வறுமைக்குட்பட்ட சித்த சுவாதீனமுற்ற தாயுடன் குடிசையொன்றில் வாழ்;ந்து வரும் இளம் யுவதி ஒருவரின் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த வீடமைப்பிற்கான ஆளனி உதவிகள் அக்குடும்பத்தில் இல்லாத நிலையில் இராணுவத்தின் ஆளனி உதவியுடன் வீட்டினை நிர்மாணிப்பதற்கான பொறுப்பினை இராணுவம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம் பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில்; இராணுவத்தின் 241ஆம் படைப்பிரிவின் பிரதானி பிரிக்கேட் கொமாண்டர் பிரிகேடியர் டபிள்யு.வி.ஜே.கே.ஜானக விமலரெத்தின பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடமைப்பிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
பூஜை வழிபாடுகளோடு ஆரம்பமான அடிக்கல் நடும் நிகழ்வில்
பிரிகேடியர் மற்றும்; பிரதேச செயலாளர்; வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோர் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
பின்னர் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டின் திட்ட அமைப்பு தொடர்பிலான வரைபடத்தை பார்வையிட்டதுடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொண்;துடன் வீடமைப்பு தொடர்பான ஆலோசனைகளையும் பிரதேச செயலாளர் மற்றும் பிரிகேடியர் உள்ளிட்டவர்கள் இராணுவத்தினருக்கு வழங்கினர்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைக்கு மத்தியிலும் இராணுவத்தினர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்ததுடன் இணைந்து மனிதாபிமான பணிகளை தொடர்ந்தும் முன்னெத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment