ஆலையடிவேம்பு MOH பிரிவில், கொரோனா 3ஆது அலையின் பின்னரான முதலாவது மரணம்




 .


சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் கொரோனா 3ஆது அலையின் பின்னரான முதலாவது மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது.

இதனை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் உறுதிப்படுத்திய நிலையில் மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அக்கரைப்பற்று 08ஆம் பிரிவைச்சேர்;ந்த 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அவசர அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அனுமதிக்கப்பட்டார்

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.

இதேநேரம் ஆலையடிவேம்பில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 02ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.