மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.




 


(க.கிஷாந்தன்)

இன்று (21) அதிகாலை முதல் பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்படுமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளளனர்.

மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளளதால் அதிகளவான நுகர்வோர் வருகைத் தருகின்றனர்.

தனியார் மற்றும் அரச பஸ் வண்டிகள் சில போக்குவரத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஆனால் அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகின்றது.

இதேவேளை, அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.