(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக தொழிலாளர் தேசிய சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அட்டனில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெருந்தோட்ட பகுதிகளில் கருமிநாசினி தெளிக்கும் பணிகள் குறைவடைந்துள்ளன. கொரோனா தொடர்பான விழிப்புணர்வும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது. உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் அந்த பணிகளை பெருந்தோட்ட பகுதிகளில் கஅந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதில்லை.
ஆகவே கொரோனா தடுப்பு பணிகளை பெருந்தோட்ட பகுதிகளிலும் அரசாங்கம் விரைவாக முன்னெடுப்பது அவசியம். அத்துடன் கிளங்கன் வைத்தியசாலையில் 14 சடலங்களை மாத்திரம் வைக்கும் நிலை உள்ளது இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய பெருந்தோட்ட மக்கள் பெருமளவு நிதியை செலவிடும் நிலையும் உள்ளது. இதற்கும் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியம். குறிப்பாக மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் இதில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதேபோல் கிளங்கன்ட வைத்தியசாலையில் பீசிஆர் பரிசோதனை அறிக்கைகளும் தாமதமாகவே வெளியிடபடுகின்றன. இது குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம். ஆகவே பெருந்தோட்ட வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுப்பது அவசியம். என்றார்
இதன்போது 1000 ரூபா சம்பளவிடயம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.
'ஒரு சில தோட்ட நிர்வாகங்களே தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை நிறுத்தியுள்ளன. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர் தேசிய சஙகத்திற்கு சந்தா பணத்தை அனுப்புமாறு தோட்ட தலைவர்கள் ஊடாக தொழிலாளர்கள் கோரியுள்ளனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளதால் இந்த சந்தாவிடயத்தில் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது. சந்தா பணத்தின் மூலமே தொழிலாளர்களின் உரிமைச் சார்ந்த விடயங்கள் பேசப்படும். ஆகவே சந்தாவை அறவிட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாததால் சந்தாவை அறவிட முடியாது என சில கம்பனிகள் கூறியிருக்கின்றன. இதனை மையப்படுத்தி எதிர்காலத்தில் நீதிமன்றத்தையும் நடவேண்டி ஏற்படலாம்.' என்றார்.
Post a Comment
Post a Comment