நான் யார் என தெரியுமா பொலிஸ் என கூறிக்கொண்டு அவர் துப்பாக்கியை எடுத்ததும்
அது வெடித்தது நண்பன் கீழே விழுந்தான் - வியாழேந்திரன் வீட்டின் முன்பாக இடம்பெற்ற சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் நண்பர் தகவல்
நானும் பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால்; சென்ற போது நான் யார் என தெரியுமா பொலிஸ் என கூறிக்கொண்டு அவர் துப்பாக்கியை எடுத்ததும் துப்பாக்கி வெடித்தது எனது நண்பன் கீழேவிழுந்தான் என முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் நேற்று திங்கட் கிழமை மாலை ஒருவர் மீது துப்;பாக்கி பிரயோகம் நடாத்தியதில் மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர்.உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்தவருடன் இருந்த முச்சக்கரவண்டி சாரதியும் அவருடைய நண்பருமான விஜயராஜா இன்று செவ்வாய்கிழமை (22) இவ்வாறு தெரிவித்தார்.
நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் -சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்பாதுகாவலர்நின்றிருந்தார்.. இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினான். நான் நிறுத்தாமல் சென்றேன்
இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ அவர் கூப்பிடுகின்றார் கதைத்துவிட்டு போவோம் என்றார் அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிகொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர் நண்பனிடம் கேட்டார் என்னடா கைகாட்டிச் சென்றனீ எனஎன கேட்டார் அதற்கு நண்பன்இதைக்கேட்க நீ யார் என்றார் அப்போது மெய்பாதுகாவலர் இதை கேட்க நீயார் என இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது
இதனையடுத்து மெய்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுநான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாக்கியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழேவிழுந்தான் இரத்தம் வெளியேவந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்
அதேவேளை நண்பன் முன்று தினங்களுக்கு முன்னர்மெய்பாதுகாவலர் உடன் பிரச்சனை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.
Post a Comment
Post a Comment