புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் அங்குரார்ப்பண வைபவம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அலரி மாளிகையில் இருந்து Zoom தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது.
16.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக வீதியில் 04 சந்திகள் அமைக்கப்படவுள்ளன.
சைனா ஹாபர் பொறியியலாளர் சங்கத்தினால் அமைக்கப்படவுள்ள இந்த அதிவேக வீதிக்காக 134.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment