நிந்தவூர் பகுதியில்,சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


வயல்வெளியில் விழுந்து கிடந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர்  பகுதியில் உள்ள  வயல் வெளி பகுதியில் இருந்து திங்கட்கிழமை(21) மாலை   இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 
 சடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் மீட்கப்பட்டுள்ளதுடன்  இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான    உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவரே மரணமடைந்தவராவார்.

சடலமாக மீட்கப்பட்டவர் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ள இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.