ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கொவிட் சட்டங்களை மீறி உள்ளக ரீதியாக விற்பனையில் ஈடுபட்ட பிறிஸ்டல் கம்பனி பிரதேச செயலாளரின் தலையீட்டை அடுத்து இன்று மூடப்பட்டது.
கடந்த சில தினங்களாக பிரதேச செயலாளருக்கு மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு இன்று நண்பகல் சென்ற பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான குழுவினர் வியாபாரம் நடைபெறுவதை அவதானித்து அக்கரைப்பற்று பொலிசாருக்கும் தகவலை வழங்கினர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசாரும் சம்பவத்தை அவதானித்ததுடன் அங்கிருந்தவர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தியதுடன் கொவிட் சட்டத்தை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 07 மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment