கல்முனை,கிளுகிளுப்பு சமூக சேவை அமைப்பினால் நிவாரணம்




 


(சர்ஜுன் லாபீர், எம்.என்.எம் அப்ராஸ்)


நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த ,வசதி குறைந்த சுமார் 160 குடும்பங்களுக்கு 4000/-ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியும்,1000/- ரூபாய் பணமும்  வழங்கும் நிகழ்வு  கிளுகிளுப்பு  சமூக சேவை அமைப்பினால்
தலைவர் ஏ.எல்.எம் ஆஸீர்  தலைமையில் கல்முனையில் (20) நடைபெற்றது.

இவ் மனிதாபிமான
நிவாரணம் வழங்கும் நிகழ்வில்,பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பிரதேச ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா  ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர் களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.

குறித்த நிவாரணப் பணிக்கு வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் தனவந்தர்கள்,வர்த்தகர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் நலன் விரும்பிகளின் நிதி உதவி  மூலம் இவ் நிவாரணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்க்து


இதேவேளை குறித்த நிவாரண பணியானது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளைப் பேணி ஆரம்ப நிவாரண பணி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.