கைதி மரணம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்…
பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை பொலிஸின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜென்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் நேற்றைய தினம் (06) உயிரிழந்திருந்தார்.
வடக்கு பாணந்துறை, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (06) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment
Post a Comment