அறநெறி ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கான உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பில் இன்று வழங்கி வைக்கப்பட்டன




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கான உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் கோரிக்கையின் பேரில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதியின் மூலம் கிடைக்கப்பெற்ற 150 உலர் உணவுப்பொதிகளே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிகழ்வில் மன்றத்தின் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முற்றிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அறநெறி பாடசாலைகளுக்கு உலர் உணவுப்பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அத்தோடு குருமார்களின் பொதிகள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டன.