நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயாகம மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றர் வரை கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை 1 மணி வரையான 16.5 மணித்தியால காலப்பகுதிக்குள் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதியில் 215.5 மி.மீ மழை வீழ்ச்சியும், ஹொரண பகுதியில் 170.5 மி.மீ மழை வீழ்ச்சியும், பாலிந்தநுவர பகுதியில் 129 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
Post a Comment
Post a Comment