பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னோடியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் சயனொளிபவன் ஆகியோர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தற்போதைய பிரதேச செயலாளராக செயற்படும் ரி.அதிசயராஜ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த பிரதேச செயலகத்தில் கணக்காளர் நியமிக்கப்படாமை காணி அதிகாரமற்று இயங்குவது தொடர்பில் ஆராய்ந்தேன்.மேலும் பிரதேச செயலகத்தினையும் பார்வையிட்டுள்ளோம்.30 வருடங்களாக இப்பிரதேச செயலகத்தில் ஏனைய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் கணக்காளர் ஒருவரை நியமித்த பின்னர் அரசாங்கள் அதை நிறுத்தியமை நல்ல செயற்பாடு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு கல்முனை உப பிரதேச செயலகத்திற்குள் நடைபெற்றதுடன் பிரதேச செயலகம் தரமுயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment