மெக்கஃபி ஆன்டி வைரஸ் மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்கஃபி பார்சிலோனா சிறையில் உயிரிழந்துள்ளார்.
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஜான் மெக்கஃபியை அமெரிக்காவுக்கு அனுப்ப ஸ்பெயின் நீதிமன்றம் ஒப்புக் கொண்ட சில மணிநேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
கேட்டலோனியாவின் நீதித்துறை, மெக்கஃபி தனது உயிரை தானே மாய்த்து கொண்டது போல தெரிகிறது என தெரிவித்துள்ளது.
முதல் வர்த்தக ஆன்டி வைரஸ் மென்பொருளை உருவாக்கிய மேக்கஃபியின் நிறுவனம் பல கோடி வர்த்தகத்தை பெற்று தந்தது. அதன்பின் மெக்கஃபி ஆன் டி வைரஸ் நிறுவனம் இன்டல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியும் மெக்கஃபி நான்கு வருடமாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.
வேறு ஒருவரின் பெயரில் வங்கி கணக்குகளை உருவாக்கி அதில் வருவாயை செலுத்தி கொண்டு வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது.
புதன்கிழமையன்று ஸ்பெயினின் தேசிய நீதிமன்றம் அமெரிக்காவிற்கு அவரை அனுப்பி வைக்க அனுமதி வழங்கியது.
ஜான் மெக்கஃபி தனது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார். இது ஒரு சதி எனவும் தெரிவித்திருந்தார்.
Post a Comment
Post a Comment