தட்டுப்பாட்டுடன் காணப்பட்ட,கட்டுப்பாடு தளர்வு




 


இன்று ஜூன் 21அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அத்துடன், ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது.

மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும்.

அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதி.

பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்பதுடன், பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவான ஏனைய நடைமுறைகளும் அவ்வாறே பின்பற்றப்படும்.

சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மத யாத்திரைகளுக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்படாது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சில்லறை வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தொடர்பில் அதன் உரிமையாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன் உரிய இடப்பரப்புக்கு ஏற்ற வாடிக்கையாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுதல் வேண்டும்.

வாடிக்கையாளர்கள் உள்நுழையும் பகுதிகளில் கை கழுவும் உபகரணங்கள் மற்றும் வெப்ப அளவு கருவி ஆகியன காணப்பட வேண்டும்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார நடைமுறைகள்: