மக்கள் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச உத்தியோகத்தர்கள்; மூலம் நிவாரணப்பணிக்காக திரட்டப்பட்ட 8 இலட்சத்திற்கும் அதிகமான நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 530 உலர் உணவுப் பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் உதவியுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் மக்கள் காலடிக்கு கொண்டு சென்று வழங்கும் பணிகள் ஆலையடிவேம்பில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கொவிட் 19 மூன்றாம் அலை காரணத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கே குறித்த உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகவும் பின்தங்கிய புளிம்பத்தை மகாசக்தி கிராமம் மற்றும் கண்ணகிகிராமம் கவடாப்பிட்டி பனங்காடு நாவற்காடு சின்னமுகத்துவாரம் உள்ளிட்ட 22 கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

பெற்றுக்கொள்ளப்பட்ட 1600 ரூபா பெறுமதியான 530 பொதிகளில்  இதுவரை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்ட நிலையில் பொதிகள் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய கிராமங்கள் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்தும் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஆலோசனையும் பிரகாரம்
முற்றிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி  ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரி பயிலுனர்கள் கண்காணிப்பில்; பொதுமக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றும் கையளிக்கப்பட்டன.  நிவாரணத்தை பெற்றுக்கொண்ட மக்கள் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.