மலையகத்தில் விசேட பூஜை





 (க.கிஷாந்தன்)

 

தீவிரமாகிவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

 

இதனையொட்டி மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டு தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன் போது விசேட யாக பூஜைகளும் இடம்பெற்றன.

 

பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தானத்தில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர்  ம.ஜெயகாந்த் ஆகியவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

 

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமான தொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும்,  இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் சர்வமத பிராத்தனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.