தேசிய கால்நடை பண்ணையும், சந்திரிகாம தோட்ட பகுதியும், தனிமைப்படுத்தலில்




 


(க.கிஷாந்தன்)

நுவரெலியா – டயகமயில் உள்ள தேசிய கால்நடை பண்ணையும், சந்திரிகாம தோட்ட பகுதியும் இன்று 06.05.2021 காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி டயகம தேசிய கால்நடை பண்ணையில் 35 பேருக்கும், சந்திரிகாம தோட்டப்பகுதியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பகுதியில் 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.