தடைகளைத் தாண்டி




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் வழமை போன்று மக்கள் பயணங்களில் ஈடுபடுவதை காண முடிகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பாண்டிருப்பு மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனைகுடி இஸ்லாமபாத் காரைதீவு சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் பொத்தவில் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி தத்தமது வாகனங்களில் வழமை போன்று நடமாடி வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் பொலிஸார் சுகாதார தரப்பினர் பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் மந்த கதியில் உள்ளதை சந்தர்பப்ங்களாக பயன்படுத்தி இவ்வாறு பயணத்தடை மீறலில் ஈடுபடுகின்றனர்.

அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த விடயங்களில் ஈடுபடாது வீடுகளில் முடங்கி இருக்குமாறு  அடிக்கடி ஒலிபெருக்கி வாயிலாக சுகாதார தரப்பினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை இவ்வாறு பயணத்தடைகளை மிறி செயற்படுவதை காண முடிகின்றது.

கல்முனை சம்மாந்துறை சவளக்கடை அக்கரைப்பற்று மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் இவ்வாறு பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் மீறி செயற்படுகின்றனர்.கடந்த 21 ஆந் திகதி 11 மணி முதல் எதிர்வரும் 25 செவ்வாய்க்கிழமை 4 மணிவரை பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் இவ்வாறு பயணத்தடையை மீறும் செயற்பாடு தொடர்கின்றது.

நாட்டின் சகல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்ற கொரொனாவின் 3 ஆவது அலையை தவிர்பப்து நாட்டின் உள்ள சகல பிரஜைகளின் கடமையல்லவா என்பதை எமது ஊடகம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.