முகக்கவசம் அணியாதோரை தூக்கிச் சென்றனர்




 


(க.கிஷாந்தன்)

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகர பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பண்டாரவளை நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை பொலிஸார் தூக்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

பண்டாரவளை நகரப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.