(
க.கிஷாந்தன்)
தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய முன் எச்சரிக்கையாக லிந்துலை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகளை நகர சபை தலைவர் லெச்சுமனன் பாரதிதாசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தொடர்ந்து வைத்தியசாலையில் கடினமாக தீர்க்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் எஸ்.பி.ஜயலத் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.
இதன் போது அவசரமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும், ஆளுநர் மற்றும் நகர சபையின் உதவியுடன் உடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உன்னெடுக்கப் போவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் உள்ள 05, 06 வாட்டுக்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றவுள்ளதாகவும் இத்தொகுதி மற்றுமொரு பிரிவுக்கு மாற்றப்படவுள்ளன. இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகள் இதன் போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தலவாக்கலை பகுதியில் கடந்த காலங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் காரணமாக சென்கூம்ஸ் மேல் பிரிவு, கீழ்பிரிவு தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பமையு
குறித்த கலந்துரையாடலில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Post a Comment
Post a Comment