பயணத்தடையை மீறி செயற்பட்டவர்களை துரத்தி சென்று அன்டீஜன் பரிசோதனை எடுப்பு
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
பயணத்தடைகளை மீறி வீதியில் அநாவசியமாக நடமாடிய பலரை அன்டீஜன் பரிசோதனைக்கு உள்ளாக்கியதில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
இச்சம்பவம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை(24) மாலை மற்றும் இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 75 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இளைஞர் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொது சுகாதார பரிசோதகர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப், தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர், இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
இதன் போது வீதியில் நடமாடியோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர் ,சுகாதார நடைமுறைகளைப் மீறியவர்கள், மீனவர்கள், என பலருக்கும் மேற்கொண்ட இந்த பரிசோதனையில் ஒரு இளைஞர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு தொற்றுள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குடும்பத்தினருக்கு தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Post a Comment
Post a Comment