நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தேசிய இரத்த வங்கியில் குருதிக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது குருதி நன்கொடையாளர்கள் குறைவடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க குறிப்பிட்டார்.
நாளொன்றுக்கான பயன்பாட்டிற்கு 500 முதல் 800 வரையான குருதிக்கூறுகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
தேசிய இரத்த வங்கியின் 106 கிளைகள் நாடளாவிய ரீதியில் செயற்படுகின்றன.
இயலுமானவர்கள் தங்களின் பகுதியிலுள்ள இரத்த வங்கிக்கு சென்று குருதி நன்கொடை செய்யுமாறு மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க கோரிக்கை விடுத்தார்.
Post a Comment
Post a Comment