"'பொலிசாரின் செயற்பாடு முற்றிலும் தவறு"




 


Guruparan KumaravadiveL 

கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிவது முக்கியம் தான். அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். மீறுவோருக்கெதிராக நடவடிக்கையும் வேண்டும்.

ஆனால் அதற்காக முகக் கவசம் அணியாதோரை பொலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சமபந்தப்பட்ட நபரின் மாண்பை (dignity) பொலீசார் மதிக்க வேண்டும். இத்தகைய மனிதாபிமானம் அல்லாத தரக்குறைவான (inhuman and degrading treatment) பொலிசாரின் செயற்பாடு முற்றிலும் தவறு.
இப்படியான அதிரடிகளை ரசிக்கும் மனநிலை எம்மத்தியில் பெருகுவது பெரும் சோகம். காவல்துறை மற்றும் இராணுவத்தின் அத்துமீறல்களை அனுபவித்து வளர்ந்த சமூகம் இம்மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளை ரசிப்பது வெட்கம்.
மனித மாண்பை, மனித உரிமைகளை கலாசாரமயப்படுத்த நாம் தவறியிருக்கிறோம்