உலர் உணவுப்பொதியினை வழங்கும் நிகழ்வு




 


இலகுவில் பாதிப்புறும் நிலையிலுள்ள பிரஜைகளின் நிலைபேற்றினை உறுதிப்படுத்தல் எனும் கருப்பொருளின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் உள்ள சிறுவர் மற்றும் பெண்கள், முதியோர் இல்லங்களுக்கான உலர் உணவுப்பொதியினை வழங்கும் நிகழ்வு இன்றும் நடைபெற்றது.


மனித எழுச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நீலன் திருச்செல்வம் நிதியத்தின் நிதியீட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற உலர் உணவுப்பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கொவிட் காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல சிறுவர் மற்றும் பெண்கள், முதியோர் இல்லங்களுக்கும் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மனித எழுச்சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கே.நிஹால் அஹமட் மற்றும் மற்றும் அரச அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் ஒரு தொகைப்பொருட்களை இல்லத்தலைவர் த.கயிலாயபிள்ளையிடம் ஒப்படைத்தனர்.