பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் அம்பாறை மாவட்ட செயலகம், நாவிதன்வெளி பிரதேச செயலகம் ,கலாச்சார அதிகார சபை, ஆகியன இணைந்து நடத்திய இந் நிகழ்வில் இப் பிரதேசத்தில் பல்துறைகளில் தெரிவு செய்யபட்ட 10 கலைஞர்களுக்கான பாராட்டும் கெளரவிப்பும் நடைபெற்றதுடன் ஏனைய அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம் ரின்ஸான் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் ,பிரதேச ஆயுள் வேத வைத்தியர் சுகைல் , நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், உட்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அத்துடன் நிகழ்வில் ஆரம்பத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார அலுவல்கள் திணைக்கள விளம்பர பலகையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் இலைக்கஞ்சி உட்பட கொரோனா எதிர்ப்பு ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் இலைக்கஞ்சி உட்பட கொரோனா எதிர்ப்பு ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment