சந்திரபோஸ், கஜானா (1991.06.12) இல் அம்பாறை மாவட்டம் கல்முனை - நற்பிட்டிமுனை பிரதேசத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலயத்திலும் உயர்தரத்தை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் கல்வி கற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியை தொடர்ந்துகொண்டிருப்பவர்.
கஜானா பாடசாலைக் காலம் முதல் விளையாட்டு, சமூகசேவை, பேச்சு, நடிப்பு என பலதுறைகளில் ஆர்வம் உளளவர். தனது 12 வயதிலேயே ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் தற்பொழுது இணைய செய்தி வாசிப்பாளராக கடமையாற்றிகொண்டிருக்கிறார்.
Anubav active school YouTube channel னையும் நடாத்தி வருகிறார் சமூக சேவையாளராகவும் தன்னை இனங்காட்டிக்கொள்ளும் இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஈடாட்டம் எனும் குறும்படத்திற்கு கதை வசனம் எழுதியதுடன் இயக்கியும் உள்ளார். இதன் ஊடாக இவரே அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பெண் இயக்குனர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார். அத்துடன் இப்படத்தின் பிரதான பாத்திரம் ஏற்றும் நடித்துளளார். மேலும் பல குறும்படங்களில் நடித்துள்ளமையும் தயாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சிலோன்24 குழுமம் www.ceylon24.com தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.
Post a Comment
Post a Comment