#Breaking:நினைவுத்தூபி இடிக்கப்பட்டு வருகின்றது




 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதையடுத்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளதை அடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு இடையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

நீதிமன்றத்தில் இன்று மாலை உத்தரவை பெற்ற பாதுகாப்பு பிரிவினர், நினைவுத்தூபியை இடித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி வழங்கவில்லை என எமது செய்தியாளர் கூறுகின்றார்