பயிலுனர்களுடனான ஒன்றுகூடல்




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


2021 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்கள பயிலுனர்களுடனான ஒன்றுகூடல் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின்  தலைமையில் புதன்கிழமை(6) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமூக இடைவெளி பேணி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் கே.பி.மனோஜ் இந்திரஜித், பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் நாவிதன்வெளி இணைப்பாளர் எம்.ஐ.எம்.பாரீஸ் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.