மீண்டும்; பலத்தமழை




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  அம்பாரை மாவட்டத்தில் நேற்றிரவு (08) முதல் மீண்டும்; பலத்தமழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

கடந்த சில தினங்கள் சீரானகால நிலை நிலவியபோதும் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இதனால் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்; வாழும் மக்களின் குடியிருப்புக்களில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

 இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி வருகின்றது.  

வீதிகளும் குடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில், உள்ளிட்ட பல பிரதேசங்களின் தாழ் நில பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தொடர்ந்தும் மழை பெய்துவருகின்றது.

மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உருவாகுவதாக சுகாதார அதிகாரிகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மக்களை அறிவுறுத்;தி வருகின்றனர்.
ஆகவே நாம் மீண்டும் தொற்று நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை மக்கள் உருவாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
எனவே தொற்றுநோய் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு மக்கள் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.