யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம் .ஜே பஸ்லின்
இச் சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மன்னாரிலிருந்து - யாழ்ப்பாணம் வந்த இ.போ.ச பேருந்தும்
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ஹயஸ் வாகனத்திலிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை ஹயஸ் வாகனம் மிக ஆபத்தான முறையில் முந்தி செல்ல முயன்றமையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது. காயமடைந்த 4 போில் ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதென கூறப்படுகிறது.
Post a Comment
Post a Comment