அக்கரைப்பற்று மன்றினால்,எழுத்து மூல சமர்ப்பணத்திற்குப் பணிப்பு





பாலமுனை கொரொனா வைத்தியசாலைக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் கௌரவ நீதிபதி முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

பாலமுனை வைத்தியசாலை கொரொனா i நேயாளிகள் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பபட்டதால், அங்கிருந்து வரும் கழிவுகள் மற்றும் நிலக்கீழ் தண்ணீர் போன்றவை, சுற்றுச் கூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் முகமாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பிரதிவாதிகளான கிழக்குப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்,கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் உட்பட 4 பிரதிவாதிகளும் தமது சட்டத்தரணிகள் சகிதம் ஆஜராகி, தமது ஆரம்ப ஆட்சேபனையை முன் வைத்தனர். எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக பிறதொரு தினம் வழங்கப்பட்டுள்ளது.