Negombo Correspondent
(நீர்கொழும்பு நிருபர் - எம்.இஸட்.ஷாஜஹான்)
Mobile 0714392857
நீர்கொழும்பு குட்டிதூவ பிரதேசத்தில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை துகல்களாக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிராக பிரதேசமக்கள் கடும் எதிர்ப்பு
நீர்கொழும்பு குட்டிதூவ பிரதேசத்தில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை துகல்களாக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிராக பிரதேசமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் முன்னர் அமைந்திருந்த பழைமை வாய்ந்த 'மீபுர' சினிமா கொட்டகை தரைமட்டமாக்கப்பட்டு தற்போது அற்த இடத்தில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை துகல்களாக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு எதிராக இன்று காலை அங்கு பிரதேசவாசிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். இதனை அடுத்து அந்த இடத்திற்னு நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி ருவணி பெர்னாந்து வருகை தந்தார். இதன்போது அங்கிருந்தோர் இந்த வேலைத்திட்டத்திற்கு அவரிடம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இங்கு இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படும் எனவும் மீனவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். நீதிமன்றம், மீன் சந்தை , விளையாட்டு மைதானம், மக்கள் வாழும் வீடுகள் என தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ள இடத்தை சுற்றி இருப்பதாகவும் அவர்கள் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டினர். இதன்போது ஆணையாளருக்கும், பிரதேச வாசிகளுக்கமிடையில் வாக்குவாதம் ஏறப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்திற்கு நீர்கொழும்பு பொலிஸார் வருகை தந்தனர்.
நாளை 5 ஈம் திகதி இதுதொடர்பாக இருதரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்றை காலை 10 மணிக்கு நடத்தவுள்ளதாக ஆணையாளர் அங்கு அறிவித்துவிட்டுச் சென்றார்.
பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை துகல்களாக்கும் தொழிற்சாலையை அமைப்பதன் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களை விளக்கி மகஜர் ஒன்றை கர்தினால் மெல்கம் ரஞ்சிதிற்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment