VaratharanMariyamPilllai.
இந்தியா ஏன் இங்கு வரவேண்டும்?
அன்று கேட்ட இன்றைய வெளிநாட்டமைச்சர்.
பதிலடி கொடுத்த அமிர்தலிங்கம்
—————————————————
மாகாண சபைகள் சட்ட மசோதா 11.05.1989 அன்று கொண்டுவரப்பட்டது.
அதில் அதிகாரப்பரவலாக்கத்தை எதிர்த்து இன்றைய வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, லக்ஷ்மன் ஜயக்கொடி, எஸ் எல் குணசேகர ஆகியோர் குறுக்கிட்டபடியிருந்தனர்.
தினேஷ் குணவர்த்தன தமது உரையில் இந்தியா ஏன் வரவேண்டும் என்று கேட்டிருந்தார்.
அவர் அதிகாரப்பரவலாக்கத்தை விட்டு, 13ஆம் திருத்த த்தைமட்டும் பேசியிருந்தார்.
இன்றுபோல நாடாளுமன்றத்தில் கமராக்கள் இல்லாத, முகநூல் இல்லாத காலமது.
அமிர்தலிங்கத்தைப் பேசவிடாமல் குறுக்கீடுகள் ,கூச்சல்கள் இடம்பெற்றன.
இது இடம்பெறுவதற்கு சிலமாதங்களுக்கு முன்னர் தினேஷ் குணவர்த்தன அமர ர் குமார் பொன்னம்பலத்துடன் காட்டுக்குப் போய் புலிகளைச் சந்தித்து வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலத்துக்கு அதிகாரமுள்ள சுயாட்சி தருவதான தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிப் பேசியிருந்தார்.
அவரது மக்கள் ஐக்கிய முன்னணி, ஶ்ரீ ல சு கட்சி இணைந்த மக்கள் ஐக்கிய முன்னணி சிறீமாவோ வை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி அதற்காகப் புலிகளின் ஆதரவைப் பெறவே வன்னிக்கு தினேஷ் போயிருந்தார்.
ஆனால் அன்று தினேஷ் குணவர்த்தன அதிகாரப் பலவலாக்கம் பற்றி எதுவும் பேசாது 13 ஆம் திருத்தம் பற்றி மட்டும் பேசினார்.
அமிர் தமது உரையில், “ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கைத் திட்டத்தில் அதன் இரண்டாவது பந்தி “ அதிகாரப் பரவலாக்கம்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. இதைப்பற்றித்தான் இங்கு பேசுகிறேன் “ என்றார்.
இது தினேஷுக்கு அமிர்தலிங்கம் கொடுத்த முதல் அடியாயிற்று.
கௌரவ தினேஷ் குணவர்த்தன “ இந்தியா ஏன் இங்கு வரவேண்டும் ? என்று கேட்டார்” - என்று கூறி இந்தியா வருவதற்கான காரணத்தை விளக்கினார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, ஒன்றிப்பு, இருசபைகள், இணைக்கப்பட்டவற்றை இணைத்து ஒரு பெரும்பான்மைத் தமிழ் அலகு இருக்கும், இணைத்தல், ஒன்று சேர்த்தல் என்பன ஒரே கருத்தைத்தான் கொண்டவை என்ற விளக்கங்களை பல குறுக்கீடுகளின் மத்தியில் விளக்கினார்.
தமிழ் மக்களின் அரசியற் போராட்ட வரலாற்றை, இடம்பெற்ற ஒப்பந்தங்கள், வன்செயல்கள் , யாழ் நூலக எரிப்பு, மாவட்டசபைகள் என எல்லாவற்றையும் பேசிய அமிர்தலிங்கம் இன்னுமொரு விடயத்தையும் சொன்னார். அதாவது:-
‘ஒரு தீர்வுக்குச் செல்வதற்கு இந்தநாட்டின் ஆட்சியாளருக்குத் துணிவு ம் முன்யோசனையும் இருக்கவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தியுடன் கைச்சாத்தானபோது ஜே ஆர் -இப்பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்கலாம்- என்றார்”
என்று அமிர்தலிங்கம் உரையாற்றினார்.
அமிர்தலிங்கம் அவர்களின் இந்த உரையே அவர் நாடாளுமன்றத்தில
பேசிய கடைசி உரையாகும்.ஏ
Post a Comment
Post a Comment