பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி தேசிய ரீதியில் பெருமைகளை கொண்டுவந்த வீரர்கள் விளையாடிய இம்மைதானத்தை மறுசீரமைக்குமாறு கோரிக்கை தற்போது முன்வைக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரம்பல் அதிகரித்துள்ளமையினால் சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு மைதானம் மறுஅறிவித்தல் வரும்வரை கடந்த காலங்களில் மாநகர சபையினால் மூடப்பட்டுள்ளது.
இதனால் உரிய பராமரிப்பும் பாவனையும் இன்மையினால் அங்கு வெள்ளநீர் தேங்கி காணப்படுவதுடன் புற்களும் அதிகளவாக வளர்ந்துள்ளன.
கடந்த காலங்களில் இம்மைதானம் கழகங்கள் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு விடப்பட்டிருந்தது.
தற்போது கொரோனாவினால் எவ்வித கவனிப்பாரின்றி புற்கள் வளர்ந்து வயல் பகுதியை போன்று காட்சி தருகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து இமமைதானத்தை சீரமைக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment