பள்ளத்தில் பாய்ந்தது




 


(கிஷாந்தன்)

 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்பட்டுள்ளனர்.

 

கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 08.01.2021 அன்று மாலை தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்