உதவித்தொகை வழங்கி வைப்பு





 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள    பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு  கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.

இக்கொடுப்பனவு  முதல் முறையாக  வழங்கப்படுவதுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக மன்றங்களுக்கு வழங்கப்படுவதுடன்  அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி    பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில்  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம் அப்துல் லத்தீப் பிரதம விருந்தினராகவும் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம் ரிம்சான் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம் சினாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் உதவித்தொகையானது நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில்  பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு அவர்களுடைய கலை கலாசார அம்சங்கள் பண்பாட்டு விழுமியங்களை பிரதேசத்தில் ஊக்குவிப்பதற்காக   வழங்கப்படுகிறது  குறிப்பிடத்தக்கது.