கல்முனை மாநகர சபையின்,வரவு செலவு நிறைவேறியது




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்கெடுப்பில் 09 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 கல்முனை  மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில் இன்று (2) காலை  வரவுசெலவு அறிக்கையை சபையில் சமர்ப்பித்ததுடன்   பகிரங்க வாக்கெடுப்பிற்கு சபையில்    விடப்பட்டது.

இதன் போது குறித்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தமிழ் தேசிய கூட்டமைப்பு   ,சுயட்சை குழு (ஹெலிகப்டர்) , சுயட்சை குழு (மான்) ,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் , என 24 பேர்  ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும் இவ்வரவு செலவு திட்டத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான கே.சிவலிங்கம் ,எஸ்.ராஜன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ.மனாப், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சப்ராஸ் மன்சூர், தமிழர் விடுதலை கூட்டணி, சாய்ந்தமருது சுயாதீன அணி என 15 பேர்   எதிராக வாக்களித்தனர்.

இருந்த போதிலும் ஆதரவாக 24 பேரும் எதிராக 15 பேரும் வாக்களித்து மேலதிகமாக 09 வாக்குகளினால் இப்பாதீடு வெற்றிபெற்றது.

  இது தவிர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி   உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது சுயாதீன அணியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.