கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக A.L.M.அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத்தினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை முதலாம் தர அதிகாரியான அஸ்மி இதுவரை அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக கடமையாற்றினார்.
பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மி அவர்கள் சிரேஸ்ட சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம்லெப்பை அவர்களின் புதல்வராவார்.
பொத்துவில் மத்திய கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவருமாவார்.
Post a Comment
Post a Comment