நாட்டின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மன்னாரில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மன்னார் தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் நாட்டுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய முக்கிய காரணியாக தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் காணப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment