சுனாமி நினைவு தின நிகழ்வுகள்





 வி.சுகிர்தகுமார் 0777113659    கார்த்திகேசு


  சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்  அம்பாறை மாவட்டத்திலும்  நினைவு  தின நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதான நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில்  இடம் பெற்றன.

இதற்கமைவாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் சூப்பர்  ஸ்டார் விளையாட்டு திடலில் அமைந்துள்ள நினைவு தூபியில் இன்று காலை சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக இடம் பெற்று இருந்தன
நினைவு தின நிகழ்வில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் கலந்து கொண்டு தேசிய கொடியினை அரை கம்பத்தில் பறக்க விட்டார். பின்னர்  தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து  அரச அதிகாரிகளுடன்  உயிர் நீத்த உறவுகளின் உறவினர்களும் இணைந்து  கண்ணீர் மல்க பிரதான தீபச்  சுடர் ஏற்றி வைத்து அஞ்சலியை செலுத்தினர்.
நிகழ்வில் இந்து கிருஸ்தவ மத குருமார்கள்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் இராணுவ அதிகாரிகள் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அதிகாரி திருக்கோவில் பிரதேச செயலக   பிரிவுத் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும்  கலந்து கொண்டு இருந்தனர்