கயிற்றை அவிழ்த்தாயிற்று




 


- A.L. Nifras #Journalist

அக்கரைப்பற்றுக்கும் அட்டாளைச்சேனைக்கும் இடையில் போக்குவரத்தை தடுப்பதற்காக உள் வீதிகளின் நடுவில் கயிறு கட்டப்பட்டதாக கூறப்பட்டது.
விசாரித்துப் பார்த்தபோது, அட்டாளைச்சேனையை தனிமைப்படுத்தலில் இருந்து தனியே விடுவிப்பதற்கான சாத்தியங்களின் பின்னணியில் சம்பந்தப்பட்டோரினால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நல்லதே. ஆனால் அவை இருதபரப்பு பங்கேற்புடன் காத்திரமாக அமைய வேண்டும். இல்லாவிடில் நெருக்கமான இரு பிரதேசங்களுக்கு இடையில் தேவையற்ற மனப்பதிவுகளை ஏற்படலாம்.
இவ்விடயத்தை நான் பிரதேச சபையின் தைக்காநகர் உறுப்பினர் அஜ்மலிடம் கதைத்த பிறகு, முன்னாள் மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பையிடம் எடுத்துக் கூறினேன்.
இதனையடுத்து அவர் எடுத்த முயற்சியின் பலனாக கயிறு அகற்றப்பட்டுள்ளது
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
- A.L. Nifras #Journalist