#ரகுவரன், சினிமாவில் ஒரு சீனுக்கு வந்தாலே மொத்த அடர்த்தியையும் தனக்குள் இழுப்பவர் #ரகுவரன்





கமல்ஹாசனுக்கு என்ன பயமோ தெரியாது இது வரை ரகுவரனோடு நடிக்கவில்லை. சினிமா முழுவதும் அடர்த்தியாக தன் அறிவை புலமையை பரப்பியவர் கமல்ஹாசன்....! சினிமாவில் ஒரு சீனுக்கு வந்தாலே மொத்த அடர்த்தியையும் தனக்குள் இழுப்பவர் ரகுவரன்...!

எப்பவுமே மனிதனின் சொல்ல முடியாத/யாரோடும் பகிர முடியாத மிக மென்மையான இருண்ட பக்கங்களை அவரின் சினிமாவின் தேர்வுகளாக இருந்தது..!


தியாகுவில் மெல்ல மெல்ல போதைக்கு அடிமையாகும் மனிதன் ..!


புரியாத புதிரில் இனம் புரியாத காரணங்களால் மனைவியை சந்தேகிக்கும் கணவர்..!


தொட்டாச் சிணுங்கியில்



தான் அதிகமாக நேசிக்கிற மனைவி முழுவதும் தன்னையே நேசிக்கனும் என்ற உளவியல் கொண்ட கணவர்...!


முகவரியில் தம்பியை வேலைக்கு போ என்று சொல்ல முடியாமல் வாழும் ஒரு மிடில் கிளாஸ் அண்ணா...!


பொம்மைக்குட்டி அம்மா வில் பைத்தியக்கார மனைவிக்காக ஒரு குழந்தையை கெஞ்சுகிற கணவர்...!


·


அஞ்சலியில் குறைபாடான குழந்தையை மனைவிக்கு தெரியாமல் மறைத்து வாழ்வது...!


என மனிதனின் நுணுக்கமான ஆழ்ந்த பிரச்சனைகளை மையமாக கொண்ட உளவியலில் இருண்ட பக்கமே அவர் தேர்வாக இருந்தது...!


பிரேமிலே ஒரு நிமிடம் கூட அவர் வீணக்கிறதில்லை என்று சொல்லாம்...!


யாரடி நீ மோகினியில் நயன்தாரா ரகுவரன்


·


காட்சியில் கேமரா அதிகமாக ரகுவரன் பின்பக்கம் தான். நயன்தாரா அழுது அழுது ரகுவரனை திட்டும் போது வியூ ரகுவரன் முதுகில் பாதியும் நயன்தாரா குளோசப் வைட் தான்.  சரியாக கவனித்தால் தன் மகனில் வைத்திருக்கும் அன்பினால் ஒரு பெண்ணின் முன்னால் கூனிக்குறுகி நிற்கும் முதியவரை அப்படியே தன்


பாதி முதுகில் ரகுவரன் கொண்டு வருவார்....!


இயக்குனருக்கு

அவமானப்படுகிற முதியவரின் முகத்தை  காட்சிக்கு கொண்டு வர வேண்டிய தேவையை ஏற்படவில்லை. 

ஒரே கேமரா கோணத்தில் front and back காட்சியாக அமைவது ஆயிரத்தில் ஒன்று தான்...!


அதே சினிமாவில் தனுசை ரோட்டிலே வைத்து அடித்துவிட்டு நடக்கும்



போதும் ரகுவரனின் நடைக்கும் முதுகுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுப்பார்.. 

அவ்வளவு திமிர் இருக்கும் அந்த நடையிலும் முதுகிலும்....!


பூவிலி வாசலிலே ஆனந்த் கேரக்டர் மனுசன் செம ஸ்கேர் செஞ்சருப்பாரு..!


ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் முத்த மகனா சம்சாரம் மின்சாரம் சிதம்பரம்


·இன்னும் நீங்கதா கேரக்டர்..!


வாட்டாக்குடி இரணியன் படத்தில் ஆண்டை னா இப்டி தான் இருந்துருப்பாங்களே னு வாழ்ந்துருப்பாரு...!


காதலன் மல்லி கிரிஷ் கர்னாட்கிட்ட பேசுர வசனம்....என்ன விளையாட்ரீங்களா வைனு சொல்ட்ரீங்க எடு னு சொல்ட்ரீங்க அது மலர் வளையம் இல்லை பாம் சார்...ஏழரை கிலோ எமன்



ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.




வாழ்க்கைச் சுருக்கம்

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர்-கஸ்தூரி தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். மேலும் இவர் தந்தை வேலாயுதம் நாயர் தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் தனது குடும்பத்துடன் குடியேறினர். அதன் பின் ரகுவரன் அவர்கள் கோவையில் தனது கல்லூரி கல்வியான இளங்கலை பட்டத்தை படித்து முடித்தார். இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.


இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.[3]


மறைவு

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்[4]. நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.


ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர்-கஸ்தூரி தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். மேலும் இவர் தந்தை வேலாயுதம் நாயர் தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் தனது குடும்பத்துடன் குடியேறினர். 


அதன் பின் ரகுவரன் அவர்கள் கோவையில் தனது கல்லூரி கல்வியான இளங்கலை பட்டத்தை படித்து முடித்தார். இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.


இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.[3]


மறைவு

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்[4]. நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.