விவசாய நிலங்களை வழங்குமாறு, கோரிக்கை







அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட வயல் நிலங்களுக்கு தீர்வாக மாற்றீடான வயல் நிலங்களை மக்களுக்கு வழங்கல்.பொலனறுவை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங் நெல்சன் அவர்கள் பாராளுமன்ற உயரிய சபையில் தெரிவிப்பு. நான் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவன் என்ற வகையில் இந்த விடயத்தினை இந்த உயரிய சபையில் தெரிவுபடுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்.  

1980 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  காலத்தில் இருந்தே பரம்பரை பரம்பரையாக  வயல் நிலங்களை விவசாயம் செய்து வயல்களை விவசாயம் செய்தவர்களாக இந்த பரம்பரை மக்கள் காணப்பட்டனர். ஆகவே, அவர்களுடைய அந்த காணியில் விவசாயம் மாத்திரம் செய்பவர்களாக காணப்பட்டதோடு வீடுகளோ வேறு எந்தவிதமான கட்டிடங்களோ அமைத்தவர்களாக அவர்கள் அல்ல, எனவே இந்த மன்றில் அவர்களுக்கு உரிய விவசாய காணிகளுக்கு  அதாவது, வன இலாக உத்தியோகத்தரினால் கைப்பற்றப்பட்ட காணிகளுக்கு பதிலாக வேறு விவசாய நிலங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 


  உரிய அமைச்சரானவர் பாராளுமன்றத்தில் அதற்கான பதிலை குறிப்பிட்டு இருக்கின்றார். அதாவது, கிங் நெல்சன் அவர்கள் கூறிய கூற்றை ஏற்று மகாவலி அமைச்சருடன் தொடர்பு கொண்டு வயல் நிலப் பிரச்சனை தீர்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்து உள்ளார்.


    மேலும், அவர் உயரிய சபையில் பொலனறுவை மாவட்ட பால் பண்ணையாளர்கள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் தொடர்பாகவும் அந்த துன்பத்தின் விளைவாக அவர்கள் செய்த ஆர்பாட்டம் தொடர்பாக  மிக தெளிவாக அந்த உயரிய சபையில் விளங்கப்படுத்தி தீர்வை பெற்று தருமாறும் குறிப்பிட்டார்.