சாய்ந்தமருதில் ஆட்டோ சாரதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை




 


(அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமரு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத்தின் அறிவுறுத்தலின் பேரில்
சுகாதார வைத்திய பணிமனையில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் இப்பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
இதன்போது முதற்கட்டமாக 20 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஏனைய சாரதிகளுக்கும் இப்பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 03 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் முதலாவது கொரோனா தொற்றாளர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.