சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக உதவித்தொகை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இன்று (8) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம்.பாரிஸ் ,சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தகர் எம்.வை நெளசானா மற்றும் கலை மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment