அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட கொடுப்பனவுகள்!




 


கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களின் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

- Advertisement -

நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

குறித்த தொகையானது அதிகபட்சமாக 10 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக உயிரிழக்கும் அரச பணியாளர்களுக்கு 7 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.