கட்சியைக் கலைத்தார், சம்பிக்க ரணவக்க





ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் 
சம்பிக்க ரணவணக்க, தமது கட்சியினை இன்று காலமானார்.

ஜாதிக ஹெல உறுமய (Jathika Hela Urumaya, சிங்களம்: ජාතික හෙළ උරුමය, தேசிய மரபுக் கட்சி), என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். இது பௌத்த பிக்குகளைத் தலைவர்களாகக் கொண்ட இக்கட்சி 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கலத் தேசியவாதக் கட்சியான சிஹல உறுமய என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது. 

2004, ஏப்ரல் 2 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் முதல் தடவையாகப் போட்டியிட்டு மொத்தமாக 6.0% வாக்குகளைப் பெற்று 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 9 இடங்களைக் கைப்பற்றியது. இவர்களில் 8 உறுப்பினர்கள் 2007 ஆம் ஆண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தனர். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.


பாதாலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka, பிறப்பு: மே 41965), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.