அக்கரைப்பற்றில் மழை -ஆலையடிவேம்பு மக்களுக்கு இடர்கால உலர் நிவாரணம்




 



வி.சுகிர்தகுமார் 0777113659 
 


  அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது.
இன்று காலை முதல் வானம் இருள் சூழ்ந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதுடன் இடைக்கிடையே காற்றும் வீசி வருகின்றது.



ஏற்கனவே தாழ்நிலங்கள் மூழ்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பெய்தால் ஆலையடிவேம்பில்; வெள்ள நிலை ஏற்படும் அபாய நிலையும் உருவாகியுள்ளது.
இதேநேரம் கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே பாதிப்புள்ளாகியிருக்கும் மக்கள் பெய்துவரும் மழையினால் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 13 ஆவது நாளாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதன் தொற்றும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக இரவு பகலாக இடர்கால உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரையில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கான நிவாரணம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.