"உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்!!




 


(க.கிஷாந்தன்)

 

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04.12.2020) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்கொடை செய்தனர்.

 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறுவதில்லை. இதனால் இரத்த வங்கியில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

 

இந்நிலையிலேயே நெருக்கடி நிலைமை ஏற்படாமல் இருக்கும் நோக்கில் மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

" உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்!! எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியே குறித்த நிகழ்வு நடைபெற்றது.

 

இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம், ராகம, டிக்கோயா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டன.